Posts

Showing posts from December, 2023

தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு

Image
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்டப் பொதுக்குழு (தேர்தல்) தூத்துக்குடி மாநகரத்தில் அமைந்துள்ள ஜாமியா பள்ளிவாசலில் வைத்து 30-12-2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு  தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மெளலவி அல்ஹாஜ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி அவர்கள் தலைமையில், மாநில தேர்தல் கண்காணிப்பாளர் கம்பம் மெளலவி அலாவுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி மௌலவி அல்ஹாஜ் A. அப்துல் அழீம் மஸ்லஹி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட தலைவராக மெளலானா அல்ஹாஜ் M. ஷேக் முஹம்மது மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்களும் மாவட்டச் செயலாளராக முஹம்மது சாதலிபுரம் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம்  மௌலவி அல்ஹாஃபிழ் K.S.ஷம்சுத்தீன் ரியாஜி  அவர்களும் மாவட்ட பொருளாளராக பேட்மாநகரம் நூருல் ஈமான் மகளிர் அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் மௌலவி அல்ஹாஃபிழ் S.E. முஹ்யித்தீன் அப்துல் காதர் மஸ்லஹி அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் மேலும் இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்...

உலமாக்கள் மற்றும் நிர்வாகிகள் நிவாரண உதவிகள் வழங்கல்

Image
இன்று 30-12-2023 சனிக்கிழமை கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் அதிபர் மர்ஹூம் அப்துல் பாரி ஹாஜியார் & பிரதர்ஸ் அவர்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மூலம் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்களை  தூத்துக்குடி ஜாமிஆ பள்ளிவாசலில் வைத்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் காஜா முஹைதீன் பாகவி, மாநிலத் துணைத் தலைவர் கம்பம் அலாவுத்தீன் மிஸ்பாஹி , மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி செயலாளர் அல்ஹாஜ் F. அபூபக்கர், மௌலவி அல்ஹாஜ் ஹாமித் பக்ரி மன்பஈ  ஆகியோர்  5 கிலோ அரிசி மற்றும் 500 மி சமையல் ஆயில் அடங்கிய கிட்டினை 50 குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்கினார்கள் இவண் தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

வெள்ளப் பகுதிகளில் உலமாக்கள் உமராக்கள் ஆய்வு

Image
வெள்ளம் பெருமழை பெய்து 10 நாட்களாகியும் தண்ணீர் வடியாமல் மிகப்பெ௫ம் சிரமத்திற்கு ஆட்பட்டி௫க்கும் தூத்துக்குடி மாதாநகர், பூப்பாண்டிபுரம், மாப்பிள்ளையூரணி (ராஜபாளையம்) பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா அல்ஹாஜ் P.A. காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் கணக்கெடுத்தார்கள். அவர்களுடன் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் பொருளாளர் மௌலவி அல்ஹாஜ் சா. முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத், மாநகர ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி அல்ஹாஜ்  எம். இம்தாதுல்லாஹ் பாகவி ஹழ்ரத் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் பி. மீராசா மரைக்காயர், மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் சங்கு மீராசா உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர்.  அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படுவதற்கான பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்படும். தகவல்  தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3

  இன்று (29/12/23) கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் அதிபர் மர்ஹும் அப்துல் பாரி ஹாஜியார் & பிரதர்ஸ் அவர்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் மூலம் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி யின் முதல்வர் மௌலவி M.இம்தாதுல்லாஹ் பாக்கவி ஹழ்ரத் அவர்கள் மற்றும் மாவட்ட அரசு காஜி மௌலவி S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் அவர்கள் வழிகாட்டலில்  ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் திருப்பூர் மேலாளர் கலீல் அண்ணன் அவர்கள் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தூத்துக்குடி மாவட்ட* *துணைத்தலைவர்* *சாதிக்பாஷா** மூலமாக தூத்துக்குடி *வாட்டர்டேங்க்பகுதியுளுள்ள* *140* *திருநங்கைகளுக்கும்* , *SMS* *தொழிலாளர்* *சங்கம்* மூலம் *60குடும்பங்களுக்கு* (5கி *அரிசி* *மற்றும்* *ஆயில்** *** *நேரடியாக* *வழங்கப்பட்டது* .  *அல்ஹம்துலில்லாஹ்* !!!  நன்றியுடன்  *தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை*

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 1

Image
இன்று (29/12/23) வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் அதிபர் மர்ஹும் அப்துல் பாரி ஹாஜியார் & பிரதர்ஸ் அவர்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் மூலம் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள்  தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியில் வைத்து மாவட்ட அரசு காஜி மௌலவி முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி மற்றும் தூத்துக்குடி மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் P.மீராசா மரைக்காயர் ஆகியோரின் அவர்களின் முன்னிலையில் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் பாக்கவி , ஜாமிஆ பள்ளி தலைமை இமாம் மௌலவி அப்துல் அழீம் மஸ்லஹி , மற்றும் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் திருப்பூர் மேலாளர் கலீல் அண்ணன் அவர்கள் மூலமாக தூத்துக்குடி மாநகரத்தின் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு ( 5கி அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய கிட்) வழங்கப்பட்டது. செல்வநாயகபுரம் ஜமாத் 20 குடும்பங்கள்  மில்லர்புரம் ஜமாத் 40 குடும்பங்கள் ஹார்பர் ஜமாத் 22 குடும்பங்கள் பிரையன்ட் நகர் ஜமாத் 30 குடும்பங்கள் சிவந்தாகுளம் ஜமாத் 30 குடும்பங்கள்  கேம்ப் ஒன் ஜமாத் 5 கு...

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் வெள்ள நிவாரண உதவிகள் part 2

Image
28.12.2023 அன்று    கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் அதிபர் மர்ஹும் அப்துல் பாரி ஹாஜியார் & பிரதர்ஸ் அவர்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் மூலம் வெள்ள நிவாரண நிதியை அண்ணா நகர் இமாம் மௌலவி அப்துல் ரஹ்மான்  மஸ்லஹி  மற்றும் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் திருப்பூர் மேலாளர் கலீல் அண்ணன் அவர்கள் மூலமாக கீழ்க்கண்ட பகுதிகளுக்கு    ஐயனடைப்பு, பஞ்சாயத்து, கோரம்பள்ளம், தூத்துக்குடி, ஜெபா நகர், புனிதா நகர், ஞான நகர் ஆகிய குடும்பங்களுக்கு (5கி அரிசி மற்றும் மளிகை பொருள் அடங்கிய 137 கிட்  நேரடியாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்  நன்றியுடன்  தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

திருப்பூர் குர்பானி அறக்கட்டளை சார்பில் நிவாரண உணவு ஏற்பாடு

Image
அஸ்ஸலாமு அலைக்கும்  தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை, மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி,  ஜாமியா பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள்,   மற்றும் திருப்பூர் குர்பானி அறக்கட்டளை இணைந்து,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 15,000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு ஏற்பாடு செய்யப்பட்டு  தூத்துக்குடி நகர் முழுவதும் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு உதவி செய்த அத்துனை பேர்களுக்கும் தூத்துக்குடி ஜமாத்தார்கள் சார்பாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம்.

சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா நிவாரண பொருட்கள் வழங்கல்

Image
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை யின் மூலமாக சிவகங்கை மாவட்ட  ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்  3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களில்  அரிசி, மளிகை சாமான்கள், பெட்ஷீட், கைலி உள்ளிட்ட துணிமணிகள்  கொங்கராயன்குறிச்சியைச் சேர்ந்த 360 குடும்பங்களுக்கு 25-12-2023 அன்று தூத்துக்குடி மாநகர  ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா   இம்தாதுல்லாஹ் பாகவி தலைமையில், தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலானா சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி  அவர்களின் வழிகாட்டலில், சிவகங்கை மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை தலைவர் மௌலானா அல்ஹாஜ்.M.முஹம்மது இப்ராஹிம்  பைஜி , செயலாளர் மௌலவி அல்ஹாஃபிழ் A.முஹம்மத் பத்ருத்தீன் யூஸுஃபி M.A, M.Phil,   பொருளாளர் மௌலானா அல்ஹாஜ்,N.ஷேக்முஹம்மது  அரூஸி ஆகியோர் மூலம்,  மௌலானா அஸ்ரார் அஹ்மத் மக்தூமி , அப்துர் ரஹ்மான் மஸ்லஹி, ஸதக் மஸ்லஹி, மாவட்ட பொருளாளர்   ஹசன் மைதீன் ஞானியார் ஃபைஜி, வட்டாரப் பொருளாளர் சித்தீக் உஸ்மானி ஆகியோர் முன்னிலையில் வழங்கப் பட்டது. நிவாரண உதவிகளை வழங்கிய சிவகங்கை மாவட்ட  உலமாக்கள் ம...

நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா ஆலோசனை

Image
 (25.12.2023) மாலை அஸர் தொழுகையை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் ஷேக் மீரான் மிஸ்பாஹி ஹழ்ரத் தலைமையில்  தூத்துக்குடி மாவட்ட சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான அடுத்தகட்ட நிவாரணம் குறித்து மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியில் வைத்து ஆலோசனை செய்தார்கள்.

தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா நிவாரண உதவி

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்காசி மாவட்ட & வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் மாவட்ட அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், ஜமாஅத்தார்களால் திரட்டப்பட்ட தொகையை,  மாவட்ட சபையின் சார்பாக தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் பாக்கவி, தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் பொருளாளர் மௌலானா மௌலவி   முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் ஜாமிஆ பள்ளிவாசல் தலமை இமாம்  அப்துல் அழீம் ஹஜரத் மற்றும் மன்பஉஸ்ஸலாஹ் ஆசிரியர்கள்  முன்னிலையில் தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் வட்டார நிர்வாகிகள்  26-12-2023 செவ்வாய் கிழமை அன்று நேரில் நிவாரண தொகை ரூ.(624480.00)   ஆறு லட்சத்தி இருபத்தி நான்காயிரத்து நானூற்றி என்பது ரூபாய் நிதி வழங்கினார்கள். நிவாரண உதவி வழங்கிய தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ஜமாஅத் தார்கள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹு கைரன் கசீரா நன்றியுடன்... தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

தூத்துக்குடியில் ஜமாஅத்துல் உலமா நிவாரண உதவி

Image
அல்லாஹ்வுடைய கிருபையால்  25.12.23 அன்று தூத்துக்குடி மாவட்ட ஜமாத் உலமா சபை சார்பாக, தூத்துக்குடி மாநகர பகுதிக்கு உட்பட்ட முருகன் தியேட்டர் அருகில் உள்ள லூர்தம்மாள்புரம் பகுதியில்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிட்டத்தட்ட 128 குடும்பங்களுக்கு  (கிட் பேக்) மளிகை பொருட்களை அந்த பகுதியைச் சார்ந்த ஹாஜி மொகிதீன் பிச்சை மற்றும் சகோதரர் ஷாஜகான் மற்றும் சகோதரர் சலீம் ஆகியோர் தலைமையில் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ் நன்றியுடன் தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

ஏரல் நிவாரண உதவி குறித்து ஆலோசனை

Image
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நகர இஸ்லாமிய வியாபாரிகள் சங்க தலைவர் அல்ஹாஜ் பாக்கர் அவர்களின் தலைமையில்,  வியாபாரி சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் 26-12-2023 அன்று மதியம் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியில் வைத்து, தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் பாக்கவி,  மாவட்ட அரசு காஜி முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஜாமிஆ பள்ளி தலைமை இமாம் அப்துல் அழீம் மஸ்லஹி மற்றும் மாநகர உலமாக்களை சந்தித்து ஏரலில் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மற்றும் வீடுகளை இழந்தோர் வாழ்வாதார மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

மேலுர் மஸ்ஜித் சேவை குழு நிவாரண உதவி

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொங்கராய குறிச்சி, அரபாத் நகர், சில்லாகுளம் ஆகிய பகுதி மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை செயலாளர் மௌலவி சம்சுதீன் மஸ்லஹி அவர்களின் தலைமையில் மேலூர் மஸ்ஜித் சேவைக் குழு மற்றும் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை இணைந்து 50 நபர்களுக்கு ஸ்டவ் அடுப்பு, குக்கர், பாய் போன்றவை நிவாரணமாக வழங்கினார்கள். நிவாரண உதவி வழங்கிய மேலுர் மஸ்ஜித் சேவை குழுவு க்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றியுடன் , தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

Image
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தில் உள்ள 10 முஸ்லிம் குடும்பங்களுக்கு 27-12-2023 புதன்கிழமை அன்று ஸ்ரீவைகுண்ட வட்டார பபொருளாளர் மவ்லவீ சித்தீக் உஸ்மானி அவர்களின் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மவ்லவீ ஷம்ஸ் மஸ்லஹி , மாவட்ட பொருளாளர் மௌலவி அல்ஹாஜ் ஹஸன் ஞானியார் ஃபைஜி தலைமையில் நிவாரணப் பொருள் வழங்கப்பட்டது  அன்புடன் தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

திண்டுக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா நிவாரண உதவி

Image
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மூலமாக   திண்டுக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்  8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களில்  10 கிலோ அரிசி 300 மளிகை சாமான் கிட் 300 பிஸ்கட், சேமியா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கிட்  இவை ஆழ்வார்திருநகரி இரண்டு மஹல்லாக்களுக்கும் , போர்வை, துண்டு, கைலி மற்றும் துணிமணிகள்  கொங்கராயன்குறிச்சி மக்களுக்கும்,  25-12-2023 அன்று  திண்டுக்கல் மௌலவி அப்துர் ரஹ்மான் யூசுஃபி அவர்களின் தலைமையில் வந்த அவர்களின் தலைமையில் வந்த திண்டுக்கல் உலமாப் பெருமக்கள் முன்னிலையில் ,  தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொருளாளர் ஹசன் மைதீன் ஞானியார் ஃபைஜி தலைமையில்,  தூத்துக்குடி ஜாமியா பள்ளி இமாம் சதக் மஸ்லஹி,  வட்டாரப் பொருளாளர் சித்தீக் உஸ்மானி , ஆழ்வார்திருநகரி ஆலிம்களான    முஹம்மது யஃகூப் பாகவி ஹழ்ரத், N.அப்துல் அஹத் காஷிஃபி, எஸ். நிஜாமுத்தீன் ரஹ்மானி ஆகியோர் முன்னிலையில் வழங்கப் பட்டது. நிவாரண உதவிகளை வழங்கிய திண்டுக்கல் மாவட்ட உலமாக்கள் மற்றும் ஜமாத்தார்களுக்கு  ம...

தாராபுரம் ஜமாஅத் நிவாரண உதவி

தூத்துக்குடி ஜமாஅத்துல் உலமா சபையின் மூலம் தாராபுரம் பொது மக்களால் வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, மளிகை சாமான்கள் பெட்சீட், நாப்கின், காய்கறி, தண்ணீர், மருந்து பொருட்கள் உட்பட பல பொருட்கள் சேர்ந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலானா இம்தாதுல்லாஹ் பாகவி ஹழ்ரத் தலைமையில் தாராபுரம் சுல்தானிய பள்ளி இளைஞர்கள் நபி வழி மன்றத்தினர்  ஆகியோரால்   தூத்துக்குடி தெ.ஆத்துர் வ ஆத்தூர் ஆகிய பகுதியில் உள்ள 650 குடும்பங்களுக்கு,  23.12.2023 அன்று இரு ஊர் பள்ளிவாசல் இமாம்கள் அமீன் பாஸி, மஸ்வூத் மஸ்லஹி முன்னிலையில் வழங்கப்பட்டது. நன்றியுடன், தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

தஞ்சை மாவட்ட நிவாரண உதவிகள்

Image
இன்று 27-12-2023 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் தஞ்சை ரஜாயே முஸ்தபா ட்ரஸ்ட் இணைந்து தூத்துக்குடி மாவட்ட ஜமாத் உலமா சபை செயலாளர் மௌலவி ஷம்சுதீன் மஸ்லஹி மாவட்ட பொருளாளர் மௌலவி ஹசன் ஞானியார் ஃபைஜி ஆகியோர் முன்னிலையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்கள், பெண்கள் நைட்டி,சேலை,சிறுவர்,சிறுமியர் ரெடிமேட் ஆடைகள் உட்பட சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்களை, தஞ்சை மாவட்ட சபையின் பொருளாளர் மெளலவி ஷாநவாஸ் லத்தீஃபி , ரஜாயே முஸ்தபா ட்ரஸ்ட் நிறுவனர் ஹாபிழ் A.முஹம்மது ருஸ்தும் அலி ரிஜ்வி  ஹஜ்ரத் தலைமையில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கினார்கள்.  இதில் தஞ்சை ரஜாயே முஸ்தபா ட்ரஸ்ட் நிர்வாகிகள் அனீஸ் சேட், சிக்கந்தர் பாட்சா, சேக் இஸ்மாயீல்  கலந்து கொண்டனர். நிவாரண உதவி வழங்கிய தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் தஞ்சை ரஜாயே முஸ்தபா ட்ரஸ்ட் நிர்வாகிகள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹு கைரன் கசீரா. நன்றியுடன் தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வெள்ள நிவாரணம்

Date - 22.12.2023 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வெள்ள நிவாரண உணவு பொருட்கள் ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சூலை வாய்க்கால் போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த வெள்ள நிவாரண உணவு பொருட்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் K.A.M முகமது அபூபக்கர்,EX MLA அவர்களின் அறிவுறுத்தலில் படி மாவட்ட தலைவர் அல்ஹாஜ் பி.மீராசா மரைக்காயர்  அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் K.மீராசா அவர்களின் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் பேட்மாநகரம் வாஜீர் அலி அவர்கள் மேற்பார்வையிலும், மாவட்ட பொது குழு உறுப்பினர் பொறியாளர் அப்துல் வதூத்,B.E மேற்பார்வையிலும் 22.12.2023 அன்று சிறப்பான முறையில் வெள்ள நிவாரண உணவு பொருட்கள் சிறப்பாக வழங்கப்பட்டது . இந்த வெள்ள நிவாரண பொருட்கள் ஆனது 1000 லிட்டர் பால் ,1500 பேருக்கான பிரட் ஆயிரம் வீடுகளுக்கு தேவையான மெழுகுவர்த்தி, பிஸ்கட், 5000 லிட்டர் தண்ணீர் கேன் போன்றவை சிறப்பாக வழங்கப்பட்டது . இந்த வெள்ள நிவாரண உணவு பொருட்களானது தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி எஸ். முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் மற்றும் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல்...

கோவை ஜமாஅத்துல் உலமா வெள்ள நிவாரண உதவி

Image
 24.12.2023 அன்று தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மூலம் கோவை ராம் சேட் குழுமத்தின் சார்பாக , தூத்துக்குடி மாவட்டம் ஆறாம் பண்ணை அருகில் உள்ள, அரபாத் நகர், இப்ராஹிம் நகர் பகுதிகளில் வசிக்கக்கூடிய 250 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி  1 கிலோ சீனி  1 கிலோ ரவை 1 கிலோ பருப்பு  கால் கிலோ டீ தூள் அடங்கிய 250 'கிட் ' கள்  தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப் பொதுச் செயலாளர் மௌலானா அல்ஹாஜ் கோவை அப்துல் அஜீஸ் பாகவி   தலைமையில்,  தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா K.A. அப்துல் அழீம் மஸ்லஹி , ஸ்ரீவைகுண்ட வட்டார ஜமாஅத் உலமா சபையின் பொருளாளர் மௌலானா அபூபக்கர் சித்தீக் உஸ்மானி உள்ளிட்ட உலமா பெருமக்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.  நிவாரணப் பொருட்கள் வழங்கும் இடத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி M.P. அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். மிக்க நன்றியுடன், தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல உலமா சபை

தர்மபுரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா வெள்ள நிவாரணம்

தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மூலம்,   தர்மபுரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் ஆகியோர்களின் சார்பாக 12 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களில் சரி பாதி  300 குடும்பங்களுக்கான 21 பொருட்கள் மற்றும் பாய், கம்பளி உள்ளிட்ட பொருட்கள்   தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலானா சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் தலைமையில்  தர்மபுரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அரசு காஜியுமான மௌலானா ஃபஸ்லே கரீம் ஹழ்ரத் மாவட்ட செயலாளர் மௌலானா சித்தீக் ஹஜரத் உள்ளிட்ட தர்மபுரி உலமாக்கள் கண்காணிப்பில், ஸ்ரீவைகுண்ட தாலுகாவில் அதிகம் பாதிக்கப்பட்ட வரதராஜபுரம், காடுவெட்டி ஆழ்வார்தோப்பு சிவதாமங்கலம், இசக்கி அம்மன்புரம் சுந்தரபாண்டியபுரம் நாகலாபுரம் கிழக்கு ஆகிய 8 ஊர்களில் சகோதர சமுதாய மக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இந்தப் பணியில் ஸ்ரீவைகுண்ட இமாம் ஹசன் அலி உஸ்மானி ஹழ்ரத் மற்றும் அந்த பகுதி இளைஞர்களும் ஜமாத்தார்களும் ஈடுபட்டு சிறப்பான ஒத்துழைப்பு நல்கினர்.

மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

24-12-2023 அன்று மதுரை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொருளாளர் மௌலவி அஹமது சாலிஹ் யூசுஃபி அவர்களின் அறிவுறுத்துதலின் பெயரில்,   மதுரை கோமதிபுரம் வடக்கு குடியிருப்போர் நலச் சங்கம்  சார்பாக அனுப்பப்பட்ட  18 வகையான பொருட்கள் அடங்கிய 75 கிட் 25 அரிசி மூட்டை, 450 துண்டு, 150 பெட்ஷீட், 50 கைலி ஆகிய நிவாரண பொருட்கள் தூத்துக்குடி மாவட்ட ஜமாத் உலமா சபையின் செயலாளர் மௌலவி சம்சுதீன் மஸ்லஹி அவர்களின் தலைமையில் தூத்துக்குடி பி & டி காலனி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது நன்றியுடன், தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

திருப்பூர் தாராபுரம் ஜமாஅத்தினர் நிவாரண உதவி

இன்று 24-12-2023 திருப்பூர் தாராபுரம் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து சுமர் 150 குடும்பங்களுக்கான கிட் வகைகளை தூத்துக்குடி பூப்பாண்டிபுரம் பகுதியில் பூ பாண்டிபுரம் ஜூம்மா பள்ளிவாசலில் இமாம் மௌலவி அப்பாஸ் கான் ரியாஜி அவர்களின் தலைமையில் 150 குடும்பங்களுக்கு வழங்கினார்கள்

சிவகங்கை மாவட்ட உலமா சபை நிவாரண தொகை ஒப்படைப்பு

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து வட்டார சபைளின் ஒத்துழைப்போடும் சிவகங்கை மாவட்ட அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் ஒத்துழைப்பபோடும் திரட்டப்பட்ட தொகையை  தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் பொருளாளர் மௌலானா மௌலவி முஜிபுர் ரகுமான் மஸ்லஹி ஹழ்ரத்,   தூத்துக்குடி மாநகர தலைவர் மௌலானா இம்தாதுல்லாஹ் பாக்கவி ஹஜ்ரத் , தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொருளாளர் ஹசன் மைதீன் ஞானியார் ஃபைஜி மற்றும் மதரசா மன்பஉஸ்ஸலாஹ் ஆசிரியர்கள் முன்னிலையில்,  சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் வட்டார நிர்வாகிகள் 25-12-2023 திங்கள் கிழமை நேரில் சென்று தூத்துக்குடி மாவட்டம், மாநகர கண்ணியமிகு தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாக பெருமக்களிடம் ரூ.825000 (எட்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்) ஒப்படைக்கப்பட்டது .          தகவல் ,                        ...