Posts

Showing posts from January, 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏரல் வணிகர்களுக்கு மீண்டும் 5 லட்சம் நிதியுதவி

Image
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஏரலை சார்ந்த 114 இஸ்லாமிய வணிகர்களுக்கு (இழப்பு 2.5 கோடி) முதல் கட்டமாக 10 லட்சம்  வழங்கப்பட்டது. 24.01.2023 புதன் கிழமை அன்று 5 லட்சத்தை ஏரல் இஸ்லாமிய வணிகர் சங்க தலைவர் பாக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளிடமும், தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில் மழை வெள்ளத்தில் மரணமடைந்த முதியோரின் மகனாரிடம் ரூ: 25,000 மும் ஜாமிஆ பள்ளிவாசலில் வைத்து தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத், மாநில முன்னாள் பொருளாளர் மௌலவி முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத்  ஆகியோர் வழங்கினார்கள். உடன் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மௌலவி அஸ்ரார் அஹ்மத் மக்தூமி ஹழ்ரத், மாவட்ட செயலாளர் மௌலவி ஷம்சுத்தீன் ரியாஜி ஹழ்ரத், மாவட்ட பொருளாளர் மௌலவி முஹையதீன் அப்துல் காதர் மஸ்லஹி ஹழ்ரத், மாவட்ட துணைத்தலைவர் மௌலவி அப்துல் அழீம் மஸ்லஹி ஹழ்ரத், மாவட்ட துணை செயலாளர்கள் மௌலவி சதகத்துல்லாஹ் மஸ்லஹி ஹழ்ரத், மௌலவி சதகத்துல்லாஹ் உஸ்மானி ஹழ்ரத், ஜாமிஆ பள்ளிவாசல் மதரஸா...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிதி உதவி

Image
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக கடந்த  11-01-2024 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 114 இஸ்லாமிய வணிகர்களின் வணிக மேம்பாட்டுக்காக ஏரல் முஸ்லிம் வணிகர்கள் நலசங்கத்தின் நிர்வாகிகள் வசம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா அல்ஹாஜ் PAK காஜா முஹையித்தீன் பாக்கவி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலானா அல்ஹாஜ் சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ் பாக்கவி தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி அல்ஹாஃபிழ் K.S. சம்சுதீன் ரியாஜி, மாவட்ட பொருளாளர் மௌலவி அல்ஹாஜ் S.E. முஹையித்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி, துணைத் தலைவர் மௌலானா அல்ஹாஜ் K.A. அப்துல் அழீம் மஸ்லஹி மற்றும் ஏரல் வட்டார உலமாக்கள் முன்னிலையில் ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடியின் இதர பகுதிகளில் மழை வெள்ளத்தால் இடிந்து அல்லது விரிசல் விழுந்து பாதிக்கப்பட்ட வீடுகள்...

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

Image
தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண பணிக்காக ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் நேற்று 10-01-2024 புதன்கிழமை அன்று ஈரோடு மண்டல ஜமாத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி M. முஹம்மது ஹபீழ் தாவூதி ஹழ்ரத் மற்றும் சபையின் சங்கைமிகு உறுப்பினர்கள் மௌலவி முனவ்வர் அலி தாவூதி ஹழ்ரத், மௌலவி அஹ்மது பஷீர் மன்பயீ ஹழ்ரத், மௌலவி அமீன் பத்ரீ ஹழ்ரத், மௌலானா அனீஸ் உஸ்மானி ஹழ்ரத் ஆகிய உலமா பெருமக்கள் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரிக்கு வருகை தந்து தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி M இம்தாதுல்லாஹ் பாக்கவி ஹழ்ரத் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் பொருளாளர், மாவட்ட அரசு காஜி மௌலவி சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் மற்றும் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி துணை முதல்வர் மௌலவி G.அஸ்ரார் அஹ்மத் மக்தூமி ஹழ்ரத் ஆகிய உலமா பெருமக்களிடம் ஈரோடு மஸ்ஜிதுகளில் வசூலிக்கப்பட்ட ரூ 2,50,000 (இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ) ரூபாய் நிவாரண பணமாக வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ் நிவாரண பணம் வழங்கிய ஈரோடு மண்டல ஜமாத்துல் உலமா சபைக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள...

தாராபுரம் நிஸ்வான் மதரஸா சார்பாக நிவாரண உதவிகள்

Image
  06/01/24 அன்று    தாராபுரம் மனாருத் தைய்யிபாத் நிஸ்வான் மதரஸாவின் சார்பாக மதரஸாவின் முதல்வர் மௌலவி முஹம்மது ஆஷிக் நூராணி, மௌலவி அப்துல் கரீம் நூராணி, மௌலவி அஸாருத்தீன் நூராணி , மற்றும் கமருத்தீன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ( 5கி அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய) 1 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி M.இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் , மற்றும் மாவட்ட அரசு காஜி மௌலவி S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத், ஆகியோரிடம் வழங்கினார்கள். நிவாரண பொருட்களை தூத்துக்குடி ரஹ்மத் நகர் சுற்றுவட்டார பகுதி, கல்லூரி நகர் மற்றும் கோரம்பள்ளம் சுற்றுவட்டார பகுதி ஆகிய பகுதிகளில் 150 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்!!!  நன்றியுடன்  தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

நெல்லை ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

Image
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் நெல்லை ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.  தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வீடுகளுக்குள் மழை வெள்ளம் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நெல்லை ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அதன் தலைவர் மௌலவி எஸ்.எஸ். சேக் மீரான் ஹழ்ரத் ஏற்பாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5000 கிங் சைஸ் நோட்டுகள், 2500 பேனாக்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ வழங்குவதற்காக வேண்டி தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதியிடம் வழங்கினார்.  ...

விருதுநகர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண நிதி

Image
விருதுநகர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் கண்ணியமிகு மௌலானா அல்ஹாஜ் நசீர் பைஜீ ஹஜரத் தலைமையிலான விருதுநகர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை உலமாப் பெருமக்கள்   இன்று (04.01.2024) தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண நிதிக்காக ₹1,75,000 ரூபாயை  தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா எம் இம்தாதுல்லாஹ் பாகவி ஹஜரத் மற்றும் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலானா முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹஜ்ரத் அவர்களை சந்தித்து நேரில் வழங்கினார்கள்.  நன்றியுடன்,   தூத்துக்குடி மாவட்ட ஜமாஅ த்துல் உலமா சபை