About Us

 AHLUS SUNNATHAH WAL JAMA’ATH 

THOOTHUKUDI JAMA’ATHUL ULAMA SABAI

நோக்கங்கள்

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் கீழ் அதன் சட்ட திட்டங்களைப் பின்பற்றி வீறு நடை போடும் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை.

எந்த ஓர் அரசியல் கட்சியையும் சார்ந்திராமல் இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு மனித சமுதாயத்திற்குத் தொண்டு செய்தல்.

சங்க உறுப்பினர்களில் நலிவுற்றவர்களின் மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்தல்.
மார்க்க அறிஞர்களான (உலமாக்கள்) உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் கல்வி நிறுவனப் பொறுப்பாளர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்து வைக்கப் பாடுபடுதல்.

முஸ்லிம்களிடையிலோ, முஸ்லிம்கள் மற்றும் மாற்று மதத்தவர்களுக்கு மத்தியிலோ ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து சமூக நல்லிணக்கம், மனிதகுல ஒற்றுமை ஏற்படப் பாடுபடுதல்.

மத, இன, மொழி வெறி ஆகியவற்றுஐக் களைந்து மனித நேயம் வளரப்பாடுபடுதல்.
இஸ்லாத்தின் கொள்களையும், நெறிமுறைகளையும், சட்ட திட்டங்களையும், பாதுகாக்கப் பாடுபடுதல்.

வரதட்சணை மற்றும் சமுதாயச் சீர்கேடுகளைக் களைந்து சமூகச் சீர்திருத்தம் ஏற்பட முயற்சித்தல்.

இலவச மருத்துவ முகாம் போன்ற சேவைகளின் மூலம் மனித சமுதாயத்திற்குச் சேவை செய்தல்.

இளைஞர்களிடையே உருவாகி வரும் தீவிரவாதம், வன்முறை, போன்ற தீயசக்திகளை அகற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.

அனாதை இல்லம், மற்றும் முதியோர் இல்லம், அமைத்து அவர்களின் மேம்பாட்டிற்காகவும், விதவை மற்றும் ஆதரவற்றவர்களின் நலனுக்காகவும் பாடுபடுதல்.

அறியாமை அகற்றி அறிவொளி பரப்ப முயற்சித்தல், கல்விக் கூடங்கள் இல்லாத பகுதிகளில் கல்விக் கூடங்களை நிறுவி ஒரே சீரான பாடத் திட்டங்களை அமைத்து கல்வி மேம்பாட்டிற்காகப் பாடுபடுதல்.

ஏழை முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்காக உதவி செய்தல், அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகத் தனிக்கவனம் செலுத்துதல்.

இஸ்லாமிய கொள்கை விளக்கங்களையும், சட்ட திட்டங்களையும், வரலாற்றுச் சம்பவங்களையும், நல்லொழுக்கங்களையும், தேவைப்படும்போதெல்லாம் மக்களுக்குத் தெளிவாக விளக்கிட பிரசுரம் வெளியிடுதல், பிரச்சாரம் செய்தல், மாநாடு போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல்.

முஸ்லிம்களுக்கிடையே ஒற்றுமையை வளர்க்கவும் பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினருக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் பாடுபடுதல்.

சங்க உறுப்பினர்களின் நலனுக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல்.

பைத்துல்மால் என்னும் பொது நிதியகம் அமைத்து ஏழை எளியவர்களுக்காக உதவி செய்தல்

 

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3