கோவை ஜமாஅத்துல் உலமா வெள்ள நிவாரண உதவி
24.12.2023 அன்று தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மூலம் கோவை ராம் சேட் குழுமத்தின் சார்பாக,
தூத்துக்குடி மாவட்டம் ஆறாம் பண்ணை அருகில் உள்ள, அரபாத் நகர், இப்ராஹிம் நகர் பகுதிகளில் வசிக்கக்கூடிய 250 குடும்பங்களுக்கு
5 கிலோ அரிசி
1 கிலோ சீனி
1 கிலோ ரவை
1 கிலோ பருப்பு
கால் கிலோ டீ தூள் அடங்கிய 250 'கிட் ' கள்
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைப் பொதுச் செயலாளர் மௌலானா அல்ஹாஜ் கோவை அப்துல் அஜீஸ் பாகவி தலைமையில்,
தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா K.A. அப்துல் அழீம் மஸ்லஹி, ஸ்ரீவைகுண்ட வட்டார ஜமாஅத் உலமா சபையின் பொருளாளர் மௌலானா அபூபக்கர் சித்தீக் உஸ்மானி உள்ளிட்ட உலமா பெருமக்களின் முன்னிலையில் வழங்கப்பட்டது.
நிவாரணப் பொருட்கள் வழங்கும் இடத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி M.P. அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள்.
மிக்க நன்றியுடன்,
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல உலமா சபை

Comments
Post a Comment