தஞ்சை மாவட்ட நிவாரண உதவிகள்











இன்று 27-12-2023 தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் தஞ்சை ரஜாயே முஸ்தபா ட்ரஸ்ட் இணைந்து

தூத்துக்குடி மாவட்ட ஜமாத் உலமா சபை செயலாளர் மௌலவி ஷம்சுதீன் மஸ்லஹி மாவட்ட பொருளாளர் மௌலவி ஹசன் ஞானியார் ஃபைஜி ஆகியோர் முன்னிலையில்

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மளிகை பொருட்கள், பெண்கள் நைட்டி,சேலை,சிறுவர்,சிறுமியர் ரெடிமேட் ஆடைகள் உட்பட சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள பொருட்களை,

தஞ்சை மாவட்ட சபையின் பொருளாளர் மெளலவி ஷாநவாஸ் லத்தீஃபி, ரஜாயே முஸ்தபா ட்ரஸ்ட் நிறுவனர் ஹாபிழ் A.முஹம்மது ருஸ்தும் அலி ரிஜ்வி ஹஜ்ரத் தலைமையில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கினார்கள். 

இதில் தஞ்சை ரஜாயே முஸ்தபா ட்ரஸ்ட் நிர்வாகிகள் அனீஸ் சேட், சிக்கந்தர் பாட்சா, சேக் இஸ்மாயீல் கலந்து கொண்டனர்.

நிவாரண உதவி வழங்கிய தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை மற்றும் தஞ்சை ரஜாயே முஸ்தபா ட்ரஸ்ட் நிர்வாகிகள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹு கைரன் கசீரா.

நன்றியுடன்
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3