தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை புதிய நிர்வாகிகள் தேர்வு
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்டப் பொதுக்குழு (தேர்தல்) தூத்துக்குடி மாநகரத்தில் அமைந்துள்ள ஜாமியா பள்ளிவாசலில் வைத்து 30-12-2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மெளலவி அல்ஹாஜ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி அவர்கள் தலைமையில், மாநில தேர்தல் கண்காணிப்பாளர் கம்பம் மெளலவி அலாவுத்தீன் மிஸ்பாஹி ஹழ்ரத் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி மௌலவி அல்ஹாஜ் A. அப்துல் அழீம் மஸ்லஹி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட தலைவராக மெளலானா அல்ஹாஜ் M. ஷேக் முஹம்மது மிஸ்பாஹி ஹழ்ரத் அவர்களும்
மாவட்டச் செயலாளராக முஹம்மது சாதலிபுரம் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் மௌலவி அல்ஹாஃபிழ் K.S.ஷம்சுத்தீன் ரியாஜி அவர்களும்
மாவட்ட பொருளாளராக பேட்மாநகரம் நூருல் ஈமான் மகளிர் அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் மௌலவி அல்ஹாஃபிழ் S.E. முஹ்யித்தீன் அப்துல் காதர் மஸ்லஹி அவர்களும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்
மேலும் இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முழுமூச்சாக செயல்பட்ட தூத்துக்குடி அண்ணா நகர் பள்ளிவாசல் இமாம் மௌலவி அல்ஹாஃபிழ் அப்துல் ரஹ்மான் மஸ்லஹி அவர்களுக்கு சேவைச் செம்மல் விருது மற்றும் சான்றிதழும் ₹10,000 ரூபாய் அன்பளிப்பும் தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் சார்பாக வழங்கப்பட்டது.
கூடுதலாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா அல்ஹாஜ் P.A. காஜா முஹைதீன் பாகவி ஹழ்ரத் அவர்கள் ₹15,000/ வழங்கி சிறப்பித்தார்கள்.
அதுபோல, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் அல்ஹாஜ் P.மீராசா மரைக்காயர் ₹5000/ அன்பளிப்பும், அல்ஹாஜ் சாகுல் சிராஜுதீன் அவர்கள் ₹2500 அன்பளிப்பும், மேக் காம்ப்ளக்ஸ் வியாபாரிகள் சார்பாக நினைவு பரிசும் பொன்னாடையும் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் ஜசாக்கல்லாஹ்!
அன்புடன்,
மௌலவி அல்ஹாஃபிழ்
A. அப்துல் அழீம் மஸ்லஹி
மாவட்டத் தேர்தல் அதிகாரி.
Comments
Post a Comment