இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வெள்ள நிவாரணம்

Date - 22.12.2023

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வெள்ள நிவாரண உணவு பொருட்கள் ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சூலை வாய்க்கால் போன்ற பகுதிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெள்ள நிவாரண உணவு பொருட்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் K.A.M முகமது அபூபக்கர்,EX MLA அவர்களின் அறிவுறுத்தலில் படி மாவட்ட தலைவர்
அல்ஹாஜ் பி.மீராசா மரைக்காயர் அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் K.மீராசா அவர்களின் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் பேட்மாநகரம் வாஜீர் அலி அவர்கள் மேற்பார்வையிலும், மாவட்ட பொது குழு உறுப்பினர் பொறியாளர் அப்துல் வதூத்,B.E மேற்பார்வையிலும்

22.12.2023 அன்று சிறப்பான முறையில் வெள்ள நிவாரண உணவு பொருட்கள் சிறப்பாக வழங்கப்பட்டது .

இந்த வெள்ள நிவாரண பொருட்கள் ஆனது 1000 லிட்டர் பால் ,1500 பேருக்கான பிரட் ஆயிரம் வீடுகளுக்கு தேவையான மெழுகுவர்த்தி, பிஸ்கட், 5000 லிட்டர் தண்ணீர் கேன் போன்றவை சிறப்பாக வழங்கப்பட்டது .

இந்த வெள்ள நிவாரண உணவு பொருட்களானது தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி எஸ். முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் மற்றும் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ் பாகவி ஹழ்ரத் அவர்கள் கண்காணிப்பில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கிய கும்பகோணம் ஹலீமா டரஸ்ட், அல்ஹாஜ் பி.மீராசா மற்றும் 
கே .திரேஸ்புரம் மீராசா ஆகியோருக்கும் 
விரைவாக கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
 மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாஜுல் அஸ்காப் அவர்களுக்கும் மிகுந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம். 

மேலும் வெள்ள நிவாரண உதவி பொருட்கள் விரைவாக மக்களுக்கு கொண்டு சேர உதவி செய்த சகோதரர் சாதிக் மற்றும் இம்ரான் தலைமையிலான சிவகலை &திரேஷ்புரம் முகைதீன், அஹ்மது, தூத்துக்குடி ரஹ்மத்நகர் அப்துல் உள்ளிட்ட மதுரை இளைஞர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3