வெள்ளப் பகுதிகளில் உலமாக்கள் உமராக்கள் ஆய்வு
வெள்ளம் பெருமழை பெய்து 10 நாட்களாகியும் தண்ணீர் வடியாமல் மிகப்பெ௫ம் சிரமத்திற்கு ஆட்பட்டி௫க்கும் தூத்துக்குடி மாதாநகர், பூப்பாண்டிபுரம், மாப்பிள்ளையூரணி (ராஜபாளையம்) பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா அல்ஹாஜ் P.A. காஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் கணக்கெடுத்தார்கள்.
அவர்களுடன் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் பொருளாளர் மௌலவி அல்ஹாஜ் சா. முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத்,
மாநகர ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி அல்ஹாஜ் எம். இம்தாதுல்லாஹ் பாகவி ஹழ்ரத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் பி. மீராசா மரைக்காயர், மாவட்ட பொருளாளர் திரேஸ்புரம் சங்கு மீராசா உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படுவதற்கான பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்படும்.
தகவல்
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
Comments
Post a Comment