தூத்துக்குடி மாநகர உலமா சபையின் நிர்வாகிகள் தேர்வு 2023
தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாக தேர்தல் தூத்துக்குடி ஜாமிஆ பள்ளிவாசலில் வைத்து தேர்தல் அதிகாரிகளான முன்னால் மாநகரத்தலைவர் மௌலவி அல்ஹாஜ் M. ஷேக் முஹம்மது மிஸ்பாஹி ஹழ்ரத் மற்றும் முன்னால் மாநில பொருளாளர் மௌலவி அல்ஹாஜ் S. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் ஆகியோரின் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மௌலவி அல்ஹாஃபிழ் J. ஷம்சுத்தீன் மஸ்லஹி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாநகரத்தின் தலைவராக தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியின் முதல்வர் மௌலவி அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ் பாஜில் பாக்கவி ஹழ்ரத் தலைவராகவும், தூத்துக்குடி ரஹ்மத் நகர் பள்ளிவாசலின் இமாம் மௌலவி அல்ஹாஃபிழ் A. பாதுஷா நாஃபிஈ ஹழ்ரத் மாநகரத்தின் செயலாளராகவும், தூத்துக்குடி கிருஸ்ணராஜபுரம் பள்ளிவாசலின் இமாம் மௌலவி அல்ஹாஃபிழ் S. ஷம்சுத்தீன் மஸ்லஹி ஹழ்ரத் மாநகரத்தின் பொருளாளராகவும் தூத்துக்குடி மாநகர உலமாக்களின் ஏபோபித்த முடிவின்படி தேர்வு செய்யப்பட்டார்கள் அல்ஹம்துலில்லாஹ். அன்புடன் தேர்தல் அதிகாரி அவர்கள்