கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 1
இன்று (29/12/23) வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் அதிபர் மர்ஹும் அப்துல் பாரி ஹாஜியார் & பிரதர்ஸ் அவர்களின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் மூலம் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண பொருட்கள்
தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியில் வைத்து மாவட்ட அரசு காஜி மௌலவி முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி மற்றும் தூத்துக்குடி மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் P.மீராசா மரைக்காயர் ஆகியோரின் அவர்களின் முன்னிலையில் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் பாக்கவி, ஜாமிஆ பள்ளி தலைமை இமாம் மௌலவி அப்துல் அழீம் மஸ்லஹி, மற்றும் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் திருப்பூர் மேலாளர் கலீல் அண்ணன் அவர்கள் மூலமாக தூத்துக்குடி மாநகரத்தின் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு (5கி அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய கிட்) வழங்கப்பட்டது.
செல்வநாயகபுரம் ஜமாத் 20 குடும்பங்கள்
மில்லர்புரம் ஜமாத் 40 குடும்பங்கள்
ஹார்பர் ஜமாத் 22 குடும்பங்கள்
பிரையன்ட் நகர் ஜமாத் 30 குடும்பங்கள்
சிவந்தாகுளம் ஜமாத் 30 குடும்பங்கள்
கேம்ப் ஒன் ஜமாத் 5 குடும்பங்கள்
பி & டி காலனி ஜமாத் 50 குடும்பங்கள்
ஜாகிர் ஹுசைன் நகர் ஜமாத் 100 குடும்பங்கள்
பூ பாண்டியபுரம் ஜமாத் 50 குடும்பங்கள்
கிருஷ்ணராஜபுரம் ஜமாத் 30 குடும்பங்கள்
ரஹ்மத் நகர் ஜமாத் 20 குடும்பங்கள்
முத்தையாபுரம் ஜமாத் 80 குடும்பங்கள்
அண்ணா நகர் ஜமாத் 100 குடும்பங்கள்
புதுக்கோட்டை பவானி நகர் ஜமாத் 40 குடும்பங்கள்
பிரையன்ட் நகர் வெள்ளிநாயகிபுரம் 30 குடும்பங்கள்
அர்ரஹ்மானியா நற்சேவை நற்பணி மன்றம் மற்றும் ஜாமிஆ இளைஞர்கள் மூலம் 200 குடும்பங்கள்
இது தவிர பரவலாக 60 குடும்பங்கள்
அல்ஹம்துலில்லாஹ்!!!
நன்றியுடன்
தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை




Comments
Post a Comment