சிவகங்கை மாவட்ட உலமா சபை நிவாரண தொகை ஒப்படைப்பு







தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து வட்டார சபைளின் ஒத்துழைப்போடும் சிவகங்கை மாவட்ட அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார்கள் ஒத்துழைப்பபோடும் திரட்டப்பட்ட தொகையை 

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் பொருளாளர் மௌலானா மௌலவி முஜிபுர் ரகுமான் மஸ்லஹி ஹழ்ரத்,  தூத்துக்குடி மாநகர தலைவர் மௌலானா இம்தாதுல்லாஹ் பாக்கவி ஹஜ்ரத், தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொருளாளர் ஹசன் மைதீன் ஞானியார் ஃபைஜி மற்றும் மதரசா மன்பஉஸ்ஸலாஹ் ஆசிரியர்கள் முன்னிலையில்,  சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் வட்டார நிர்வாகிகள் 25-12-2023 திங்கள் கிழமை நேரில் சென்று தூத்துக்குடி மாவட்டம், மாநகர கண்ணியமிகு தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாக பெருமக்களிடம் ரூ.825000 (எட்டு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம்) ஒப்படைக்கப்பட்டது .         

தகவல் ,                                              மௌலவி அல்-ஹாஃபிழ் A. முஹம்மத் பத்ருத்தீன் யூஸுஃபி M.A, M.Phil செயலாளர்,
சிவகங்கை மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை.

நிவாரணத் தொகை வழங்கிய சிவகங்கை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைக்கும் மக்களுக்கும் நன்றி

இப்படிக்கு 
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3