வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏரல் வணிகர்களுக்கு மீண்டும் 5 லட்சம் நிதியுதவி

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட ஏரலை சார்ந்த 114 இஸ்லாமிய வணிகர்களுக்கு (இழப்பு 2.5 கோடி) முதல் கட்டமாக 10 லட்சம் வழங்கப்பட்டது. 24.01.2023 புதன் கிழமை அன்று 5 லட்சத்தை ஏரல் இஸ்லாமிய வணிகர் சங்க தலைவர் பாக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளிடமும், தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில் மழை வெள்ளத்தில் மரணமடைந்த முதியோரின் மகனாரிடம் ரூ: 25,000 மும் ஜாமிஆ பள்ளிவாசலில் வைத்து தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத், மாநில முன்னாள் பொருளாளர் மௌலவி முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் ஆகியோர் வழங்கினார்கள்.

உடன் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மௌலவி அஸ்ரார் அஹ்மத் மக்தூமி ஹழ்ரத், மாவட்ட செயலாளர் மௌலவி ஷம்சுத்தீன் ரியாஜி ஹழ்ரத், மாவட்ட பொருளாளர் மௌலவி முஹையதீன் அப்துல் காதர் மஸ்லஹி ஹழ்ரத், மாவட்ட துணைத்தலைவர் மௌலவி அப்துல் அழீம் மஸ்லஹி ஹழ்ரத், மாவட்ட துணை செயலாளர்கள் மௌலவி சதகத்துல்லாஹ் மஸ்லஹி ஹழ்ரத், மௌலவி சதகத்துல்லாஹ் உஸ்மானி ஹழ்ரத், ஜாமிஆ பள்ளிவாசல் மதரஸா உஸ்தாத் மௌலவி அபுபக்கர் சித்திக் பாகவீ ஹழ்ரத், ஸ்ரீவைகுண்டம் வட்டார செயலாளர் மௌலவி சுலைமான் உலவி ஹழ்ரத் மற்றும் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலவி சையத் அப்பாஸ் அலி மஸ்லஹி ஹழ்ரத் ஆகியோர் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3