ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரண பணிக்காக ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் நேற்று 10-01-2024 புதன்கிழமை அன்று ஈரோடு மண்டல ஜமாத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி M. முஹம்மது ஹபீழ் தாவூதி ஹழ்ரத் மற்றும் சபையின் சங்கைமிகு உறுப்பினர்கள் மௌலவி முனவ்வர் அலி தாவூதி ஹழ்ரத், மௌலவி அஹ்மது பஷீர் மன்பயீ ஹழ்ரத், மௌலவி அமீன் பத்ரீ ஹழ்ரத், மௌலானா அனீஸ் உஸ்மானி ஹழ்ரத் ஆகிய உலமா பெருமக்கள் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரிக்கு வருகை தந்து தூத்துக்குடி மாநகர ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி M இம்தாதுல்லாஹ் பாக்கவி ஹழ்ரத் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னாள் பொருளாளர், மாவட்ட அரசு காஜி மௌலவி சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத் மற்றும் மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி துணை முதல்வர் மௌலவி G.அஸ்ரார் அஹ்மத் மக்தூமி ஹழ்ரத் ஆகிய உலமா பெருமக்களிடம் ஈரோடு மஸ்ஜிதுகளில் வசூலிக்கப்பட்ட ரூ 2,50,000 (இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம்) ரூபாய் நிவாரண பணமாக வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

நிவாரண பணம் வழங்கிய ஈரோடு மண்டல ஜமாத்துல் உலமா சபைக்கு எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஜஸாக்கல்லாஹு கைரன் கசீரா.

நன்றியுடன்
தூத்துக்குடி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3