தாராபுரம் நிஸ்வான் மதரஸா சார்பாக நிவாரண உதவிகள்
06/01/24 அன்று
தாராபுரம் மனாருத் தைய்யிபாத் நிஸ்வான் மதரஸாவின் சார்பாக மதரஸாவின் முதல்வர் மௌலவி முஹம்மது ஆஷிக் நூராணி, மௌலவி அப்துல் கரீம் நூராணி, மௌலவி அஸாருத்தீன் நூராணி, மற்றும் கமருத்தீன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
(5கி அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய) 1 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை
தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி M.இம்தாதுல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத், மற்றும் மாவட்ட அரசு காஜி மௌலவி S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஹழ்ரத், ஆகியோரிடம் வழங்கினார்கள்.
நிவாரண பொருட்களை தூத்துக்குடி ரஹ்மத் நகர் சுற்றுவட்டார பகுதி, கல்லூரி நகர் மற்றும் கோரம்பள்ளம் சுற்றுவட்டார பகுதி ஆகிய பகுதிகளில் 150 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!!!
நன்றியுடன்
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
Comments
Post a Comment