நெல்லை ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் நெல்லை ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17, 18 ஆகிய இரு தினங்கள் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வீடுகளுக்குள் மழை வெள்ளம் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நெல்லை ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அதன் தலைவர் மௌலவி எஸ்.எஸ். சேக் மீரான் ஹழ்ரத் ஏற்பாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5000 கிங் சைஸ் நோட்டுகள், 2500 பேனாக்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ வழங்குவதற்காக வேண்டி தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி முஜிபுர் ரஹ்மான் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதியிடம் வழங்கினார். 
அப்போது திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் எஸ்.எஸ். சேக் மீரான் ஹழ்ரத், தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா தலைவர் மௌலவி இம்தாதுல்லாஹ் பாகவி ஹழ்ரத், அம்பை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலவி முபாரக் அஹமது ஹழ்ரத், பொருளாளர் மௌலவி ஜாஹிர் ஹுசைன் ஹழ்ரத், தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் இமாம் மௌலவி சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி, ஆகியோர் உடனிருந்தனா்.

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3