வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு நிதி உதவி

தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக கடந்த 
11-01-2024 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மழை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 114 இஸ்லாமிய வணிகர்களின் வணிக மேம்பாட்டுக்காக ஏரல் முஸ்லிம் வணிகர்கள் நலசங்கத்தின் நிர்வாகிகள் வசம் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா அல்ஹாஜ் PAK காஜா முஹையித்தீன் பாக்கவி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி மௌலானா அல்ஹாஜ் சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌலானா அல்ஹாஜ் M. இம்தாதுல்லாஹ் பாக்கவி தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி அல்ஹாஃபிழ் K.S. சம்சுதீன் ரியாஜி, மாவட்ட பொருளாளர் மௌலவி அல்ஹாஜ் S.E. முஹையித்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி, துணைத் தலைவர் மௌலானா அல்ஹாஜ் K.A. அப்துல் அழீம் மஸ்லஹி மற்றும் ஏரல் வட்டார உலமாக்கள் முன்னிலையில் ரூ.10 இலட்சம் வழங்கப்பட்டது.

மேலும் தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடியின் இதர பகுதிகளில் மழை வெள்ளத்தால் இடிந்து அல்லது விரிசல் விழுந்து பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வியாபார முதலீடு நட்டமடைந்த கடைகளுக்கான நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையிடம் வெள்ள நிவாரண நிதி வழங்கிய ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, ஈரோடு மண்டலம், ஈரோடு காஜி கிபாயதுல்லாஹ், விருதுநகர், அதிராம்பட்டினம் ஆகிய மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றியுடன்
செயலாளர்

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3