சென்னை மண்ணடி பள்ளிவாசல்களின் சார்பில் வெள்ள நிவாரண உதவி
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மூலமாக சென்னை மண்ணடி பள்ளிவாசல்களின் சார்பில் 380 குடும்பங்களுக்கான பெட்ஷீட் கைலி மற்றும் துண்டு ஆகிய பொருட்கள் இன்று
25-12-2023 தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொருளாளர் ஹசன் மைதீன் ஞானியார் ஃபைஜி தலைமையில்,
ஸ்ரீவைகுண்டம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் செயலாளர் சுலைமான் உலவி மற்றும் வட்டார உலமாக்களின் கண்காணிப்பில்
சென்னை மண்ணடி லஜ்னத்துல் முஹ்ஸினீன் பள்ளிவாசலின் இமாம் மௌலவி ஃபக்ருத்தீன் பாக்கவி தலைமையில் வந்த சென்னை உலமாக்கள் குழு பாதிக்கப்பட்ட சிறுதண்டநல்லூர் கீழ ஜமாத் மேல ஜமாத் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள்
நிவாரண உதவிகளை வழங்கிய சென்னை மண்ணடி உலமாக்கள் மற்றும் ஜமாத்தார்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் ஜஸாக்கல்லாஹு கைரன் கசீரா
நன்றியுடன்,
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை



Comments
Post a Comment