மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரியில் மாபெரும் ஸலவாத் மஜ்லிஸ் 2023

மாபெரும் ஸலவாத் மஜ்லிஸ்

நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். ஆகவே, முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல்குர்ஆன் : 33:56)

என் மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான். (ஸஹீஹ் முஸ்லிம் 687)

இன்ஷா அல்லாஹ்,
நாள்: 13.11.2023 திங்கட்கிழமை (ரபீவுல் ஆகிர் பிறை 28) 
காலை 9 மணியளவில் 

இடம்: மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி.

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

உலகம் முழுவதும் நிம்மதியும் பாதுகாப்பும் சமாதானமும் நிலவ வேண்டி, நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது,

 10 கோடி ஸலவாத் சமர்ப்பண மஜ்லிஸ்

மற்றும் அபூர்வ துஆ மஜ்லிஸ் வழமைபோல் இவ்வருடமும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே இன்று முதல் தாங்கள் ஓதும் ஸலவாத்தின் எண்ணிக்கைகளை கீழ்காணும் வாட்ஸ்அப் எண்களில் ஏதேனும் ஒன்றிற்கு அனுப்பி வைத்து மஜ்லிஸில் பங்கு பெற்று அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் ஷஃபாஅத்தை பெற அன்புடன் அழைக்கின்றோம்.

அழைப்பின் மகிழ்வில்...

நிர்வாகிகள், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மன்பவுஸ்ஸலாஹ் அரபிக்கல்லூரி 
31-33, வ.உ.சி ரோடு, தூத்துக்குடி 628002

Comments

Popular posts from this blog

கருங்குளம் மக்களுக்கு நிவாரண உதவி

ஈரோடு மண்டல ஜமாஅத்துல் உலமா சபை நிவாரண உதவி

கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் நிவாரண உதவிகள் - Part 3